Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

அன்பே விடாமல் சேர்த்துக் கொண்டீர்


    • அன்பே விடாமல் சேர்த்துக் கொண்டீர்
    • 1. அன்பே விடாமல் சேர்த்துக் கொண்டீர்
    • சோர்ந்த என் நெஞ்சம் உம்மில் ஆறும்;
    • தந்தேன் என் ஜீவன் நீரே தந்தீர்,
    • பிரவாக அன்பில் பாய்ந்தென்றும்
    • ஜீவாறாய்ப் பெருகும்.

    • 2. ஜோதி! என் ஆயுள் முற்றும் நீரே;
    • வைத்தேன் உம்மில் என் மங்கும் தீபம்;
    • நீர் மூட்டுவீர் உம் ஜோதியாலே; 
    • பேர் ஒளிக் கதிரால் உள்ளம்
    • மேன்மேலும் ஸ்வாலிக்கும்.

    • 3. பேரின்பம் நோவில் என்னைத் தேடும்!
    • என் உள்ளம் உந்தன் வீடே என்றும்;
    • கார் மேகத்திலும் வான ஜோதி!
    • விடியுங்காலை களிப்பாம்!
    • உம் வாக்கு மெய் மெய்யே.

    • 4. குருசே! என் வீரம் திடன் நீயே;
    • உந்தன் பாதம் விட்டென்றும் நீங்கேன்;
    • வீண் மாயை யாவும் குப்பை நீத்தேன்;
    • விண் மேனியாய் நித்திய ஜீவன்
    • வளர்ந்து செழிக்கும்.
  • Album: பாமாலைகள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 713 times