Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

அதிகாலையிலுமைத் தேடுவேன்


    • அதிகாலையிலுமைத் தேடுவேன் முழு மனதாலே
    • பல்லவி
    • அதிகாலையிலுமைத் தேடுவேன் முழு மனதாலே
    • தேவாசீர் வாதம் பெற நாடுவேன் ஜெப தபத்தாலே 

    • அனுபல்லவி
    • இதுகாறும் காத்த தந்தை நீரே;
    • இனிமேலும் காத்தருள் செய்வீரே,
    • பதிவாக உம்மிலே நான் நிலைக்கவே,
    • பத்திரமாய் எனை உத்தமனாக்கிடும் , தேவே! --- அதிகாலை 

    • சரணங்கள்
    • 1. போனராமுழுவதும் பாதுகாத்தருளின போதா! 
    • எப்போதும் எங்களுடனிருப்பதாய் உரைத்த நல் நாதா!
    • ஈனப்பாவிக் கேதுதுணை லோகிலுண்டு பொற்பாதா?
    • எனக்கான ஈசனே! வான ராசனே!
    • இந்த நாளிலும் ஒரு பந்தமில்லாமல் காரும் நீதா! --- அதிகாலை

    • 2. பலசோதனைகளால் சூழ்ந்துநான் கலங்கிடும்போது
    • தப்பாது நின்கிருபை தாங்கிட வேணும் அப்போது,
    • விலகாது என்சமூகம் என்ற வாக்கில் தவறேது?
    • விசுவாசங் கொண்டு மெய்ப் பாசமூண்டிட
    • விக்கினம் யாவிலும் வெற்றி காணுவேன் மலைவேது? --- அதிகாலை

    • 3. நரர்யாவர்க்குமுற்ற நண்பனாய் நடந்திட வையே!
    • தீநாவின் பாவமற நன்மைகள் மொழிந்திடச் செய்யே!
    • பரலோக ஆவியைநல் மாரி போலெனிலே பெய்யே!
    • புகழார நாதனே! வேத போதனே!
    • பூரணமாய் உனைப் போற்றுவேன், தினந் தினம் மெய்யே! --- அதிகாலை
    • toilax 5mg bhalsbrand.site toilax spc
  • Album: கீர்த்தனைகள், Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 852 times