Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

அதிசயமான ஒளிமய நாடாம்


    • அதிசயமான ஒளிமய நாடாம்
    • பல்லவி 
    • அதிசயமான ஒளிமய நாடாம்
    • நேசரின் நாடாம் - நான்
    • வாஞ்சிக்கும் நாடாம் -என் 

    • சரணங்கள்
    • 1. பாவம் இல்லாத நாடு 
    • ஒரு சாபமும் காணா நாடு 
    • நித்திய மகிழ்ச்சி ஓயாத கீதம்
    • உன்னதத்தில் ஓசன்னா அல்லேலூயா --- அதிசயமான

    • 2. சந்திர சூரியன் இல்லை 
    • ஆனால் இருள் ஏதும் காணவில்லை
    • தேவ குமாரன் ஜோதியில் ஜோதி
    • நித்திய வெளிச்சமாவார் - என்றும் பகல் --- அதிசயமான

    • 3. விதவிதக் கொள்கை இல்லை
    • பலப் பிரிவுள்ள பலகை இல்லை
    • ஒரே ஒரு குடும்பம் ஒரே ஒரு தலைவர்
    • எங்குமே அன்பு மயம் - அன்புள்ளோர் செல்லும் --- அதிசயமான 

    • 4. பிரச்சனை ஏதும் இல்லை
    • வீண் குழப்பங்கள் ஒன்றும் இல்லை
    • மொழி , நிறம் , ஜாதி பற்று உடையோர்
    • எவருமே அங்கு இல்லை --- அதிசயமான

    • 5. கடைத்தெரு ஏதும் இல்லை
    • தொழிற்சாலைகள் ஒன்றும் இல்லை
    • தரித்திரர் , செல்வர் ,சிறியவர் , பெரியோர்
    • ஆகிய சிறப்பும் இல்லை - எல்லாம் சமம் --- அதிசயமான

    • 6. பல பலத் திட்டம் இல்லை - ஆளும்
    • சட்டங்கள் ஏதுமில்லை
    • காவல் துறையில்லை , கண்டிப்பும் இல்லை
    • மனிதனின் ஆட்சி இல்லை - பேரானந்தம் --- அதிசயமான

    • 7. இயேசுவின் இரத்தத்தினால் - பாவம்
    • கழுவினால் செல்லலாமே
    • இத்தனை பெரிய சிலாக்கியம் இழப்போர்
    • பூமியில் எவரும் வேண்டாம் - இன்றே வாரீர் --- அதிசயமான
  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 3418 times