Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

அர்ப்பணித்தேன்


    • அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய்
    • 1. அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய்
    • அற்புத நாதா உம் கரத்தில்
    • அனைத்தும் உமக்கே சொந்தம் என்று 
    • அன்பரே என்னையே தத்தம் செய்தேன் 

    • பல்லவி
    • அனைத்தும் கிறிஸ்துவுக்கே - எந்தன் 
    • அனைத்தும் அர்ப்பணமே 
    • என் முழு தன்மைகள் ஆவல்களும்
    • அனைத்தும் கிறிஸ்துவுக்கே 

    • 2. என் எண்ணம் போல நான் அலைந்தேனே 
    • என்னைத் தடுத்திட்ட தாருமில்லை
    • உம் சிலுவை அன்பை சந்தித்தேனே
    • நொறுங்கி வீழ்ந்தேனே உம் பாதத்தில்

    • 3. ஐம்புலன்கள் யாவும் அடங்கிட
    • ஐம்பெருங் காயங்கள் ஏற்ற நாதா
    • வான் புவி கிரகங்கள் ஆள்பவரே 
    • என்னையும் ஆண்டிட நீரே வல்லோர்

    • 4. என் வாழ்வில் இழந்த நன்மைக்கீடாய் 
    • எஞ்சிய நாட்களில் உழைப்பேனே
    • நீர் தந்த ஈவு வரங்கள் யாவும்
    • உம் பணி சிறந்திட முற்றும் தந்தேன்
  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 2997 times