Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

அகோர கஸ்தி பட்டோராய்


    • அகோர கஸ்தி பட்டோராய்
    • 1. அகோர கஸ்தி பட்டோராய் 
    • வதைந்து வாடி நொந்து,
    • குரூர ஆணி தைத்தோராய்
    • தலையைச் சாய்த்துக்கொண்டு,
    • மரிக்கிறார் மா நிந்தையாய்!
    • துன்மார்க்கர் சாகும் வண்ணமாய்
    • மரித்த இவர் யாவர்?

    • 2. சமஸ்தமும் மா வடிவாய்
    • சிஷ்டித்து ஆண்டுவந்த,
    • எக்காலமும் விடாமையாய்
    • விண்ணோரால் துதிபெற்ற
    • மா தெய்வ மைந்தன் இவரோ?
    • இவ்வண்ணம் துன்பப்பட்டாரோ
    • பிதாவின் திவ்விய மைந்தன்?

    • 3. அநாதி ஜோதி நரனாய்
    • பூலோகத்தில் ஜென்மித்து,
    • அரூபி ரூபி தயவாய்
    • என் கோலத்தை எடுத்து,
    • மெய்யான பலியாய் மாண்டார்
    • நிறைந்த மீட்புண்டாக்கினார்
    • என் ரட்சகர், என் நாதர்.

  • Album: பாமாலைகள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 732 times