Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

அநாதியான கர்த்தரே


    • அநாதியான கர்த்தரே
    • 1. அநாதியான கர்த்தரே, 
    • தெய்வீக ஆசனத்திலே
    • வானங்களுக்கு மேலாய் நீர்
    • மகிமையோடிருக்கிறீர்.

    • 2. பிரதான தூதர் உம்முன்னே
    • தம் முகம் பாதம் மூடியே
    • சாஷ்டாங்கமாகப் பணிவார், 
    • 'நீர் தூய தூயர்' என்னுவார்.

    • 3. அப்படியானால், தூசியும்
    • சாம்பலுமான நாங்களும்
    • எவ்வாறு உம்மை அண்டுவோம்?
    • எவ்விதமாய் ஆராதிப்போம்?

    • 4. நீரோ உயர்ந்த வானத்தில்,
    • நாங்களோ தாழ்ந்த பூமியில்
    • இருப்பதால், வணங்குவோம்,
    • மா பயத்தோடு சேருவோம். 
  • Album: பாமாலைகள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 818 times