Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

அன்போடு எம்மைப்


    • அன்போடு எம்மைப் போஷிக்கும்
    • 1. அன்போடு எம்மைப் போஷிக்கும்
    • பெத்தேலின் தெய்வமே;
    • முன்னோரையும் நடத்தினீர்
    • கஷ்ட இவ்வாழ்விலே.

    • 2. கிருபாசனமுன் படைப்போம்
    • எம் ஜெபம் ஸ்தோத்ரமும்;
    • தலைமுறையாய்த் தேவரீர்
    • எம் தெய்வமாயிரும்.

    • 3. மயங்கும் ஜீவ பாதையில்
    • மெய்ப் பாதை காட்டிடும்;
    • அன்றன்றுமே நீர் தருவீர்
    • ஆகாரம் வஸ்திரமும்.

    • 4. இஜ்ஜீவிய ஓட்டம் முடிந்து,
    • பிதாவின் வீட்டினில்
    • சேர்ந்திளைப்பாறுமளவும்
    • காப்பீர் உம் மறைவில்.

    • 5. இவ்வாறான பேர் நன்மைக்காய்
    • பணிந்து கெஞ்சினோம்;
    • நீர்தாம் எம் தெய்வம் என்றுமே,
    • சுதந்தரமுமாம். 
  • Album: பாமாலைகள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 697 times