Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

ஆ இயேசுவே


    • ஆ இயேசுவே, உம்மாலே
    • 1. ஆ இயேசுவே, உம்மாலே
    • நான் மீட்கப்பட்டவன்;
    • உம் திவ்விய ரத்தத்தாலே
    • நான் சுத்தமானவன்;
    • மிகுந்த கஸ்தியாலே
    • என் தோஷத்தைத் தீர்த்தீர்;
    • உமது சாவினாலே
    • நீர் என்னை ரட்சித்தீர்.

    • 2. நான் உம்மால் என்றும் வாழ,
    • இப்பந்தியில் நீரே
    • என் ஆவிக் கேற்றதான
    • அமிர்தம் தந்தீரே;
    • உம் ஆசீர்வாதம் ஈந்து,
    • என் பாவம் மன்னியும்;
    • அன்போடு என்னைச் சேர்த்து,
    • தயாளம் காண்பியும்.

    • 3. நீர் இன்னும் என்னில் காணும்
    • பொல்லாங்கு யாவையும்
    • அகற்றிப்போட வாரும்,
    • என் நெஞ்சில் தங்கிடும்;
    • நான் உம்மைப் பற்றிக் கொள்ள
    • கருணை புரியும்;
    • மிகுந்த தாழ்மையுள்ள
    • சித்தம் கடாஷியும்.

    • 4. நல் மீட்பரே, உம்மோடு
    • நான் ஐக்கியமாகவும்,
    • நாடோறும் வாஞ்சையோடு
    • உம்மில் நிலைக்கவும்,
    • மிகுந்த அன்பினாலே
    • துணை செய்தருளும்;
    • தெய்வீக அப்பத்தாலே
    • நீர் என்னைப் போஷியும். 
  • Album: பாமாலைகள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 677 times