Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

ஆத்துமாக்கள் மேய்ப்பரே


    • ஆத்துமாக்கள் மேய்ப்பரே
    • 1. ஆத்துமாக்கள் மேய்ப்பரே,
    • மந்தையைப் பட்சிக்கவும்
    • சாத்தான் பாயும் ஓநாய் போல்
    • கிட்டிச்சேரும் நேரமும்,
    • நாசமோசம் இன்றியே
    • காரும், நல்ல மேய்ப்பரே.

    • 2. பணம் ஒன்றே ஆசிக்கும்
    • கூலியாளோ ஓடுவோன்;
    • காவல் இன்றிக் கிடக்கும்
    • தொழுவத்தின் வாசல்தான்;
    • வாசல், காவல் ஆன நீர்
    • மந்தைமுன் நின்றருள்வீர்.

    • 3. கெட்டுப்போன யூதாஸின்
    • ஸ்தானத்திற்குத் தேவரீர்,
    • சீஷர் சீட்டுப்போடவே
    • மத்தியா நியமித்தீர்;
    • எங்கள் ஐயம் யாவிலும்,
    • கர்த்தரே, நடத்திடும்.

    • 4. புது சீயோன் நகரில்
    • பக்தர் வரிசையிலே
    • நிற்கும் மத்தியாவோடும்
    • நாங்கள் சேரச் செய்யுமே
    • கண் குளிர உம்மையும்
    • காணும் பாக்கியம் அருளும். 
  • Album: பாமாலைகள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 247 times