Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

என் அருள் நாதா


    • என் அருள் நாதா இயேசுவே
    • 1. என் அருள் நாதா இயேசுவே
    • சிலுவைக் காட்சி பார்க்கையில்
    • பூலோக மேன்மை நஷ்டமே
    • என்றுணர்ந்தேன் என் உள்ளத்தில்

    • 2. என் மீட்பர் சிலுவை அல்லால்
    • வேறெதை நான் பாராட்டுவேன்
    • சிற்றின்பம் யாவும் அதினால்
    • தகாததென்று தள்ளுவேன்

    • 3. கை , தலை , காலிலும் இதோ
    • பேரன்பும் துன்பும் கலந்தே
    • பாய்ந்தோடும் காட்சிபோல் உண்டோ
    • முள் முடியும் ஒப்பற்றதே

    • 4. சராசரங்கள் அனைத்தும்
    • அவ்வன்புக்கு எம்மாத்திரம்
    • என் ஜீவன் சுகம் செல்வமும்
    • என் நேசருக்குப் பாத்தியம்

    • 5. மாந்தர்க்கு மீட்பைக் கஸ்தியால்
    • சம்பாதித்தீந்த இயேசுவே
    • உமக்கு என்றும் தாசரால் 
    • மா ஸ்தோத்திரம் உண்டாகவே

  • Album: பாமாலைகள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 326 times