Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

ஓசன்னா பாலர் பாடும்


    • ஓசன்னா பாலர் பாடும் ராஜாவாம் மீட்பர்க்கே
    • மகிமை , புகழ் , கீர்த்தி எல்லாம் உண்டாகவே 

    • 1. கர்த்தாவின் நாமத்தாலே வருங் கோமானே , நீர்
    • தாவீதின் ராஜா மைந்தன் , துதிக்கப்படுவீர்.

    • 2. உன்னத தூதர் சேனை விண்ணில் புகழுவார்;
    • மாந்தர் படைப்பு யாவும் இசைந்து போற்றுவார்.

    • 3. உம்முன்னே குருத்தோலை கொண்டேகினார்போலும்,
    • மன்றாட்டு , கீதம் , ஸ்தோத்திரம் கொண்டும்மைச் சேவிப்போம்

    • 4. நீர் பாடுபடுமுன்னே பாடினார் யூதரும்;
    • உயர்த்தப்பட்ட உம்மை துதிப்போம் நாங்களும்.

    • 5. அப்பாட்டைக் கேட்டவண்ணம் எம் வேண்டல் கேளுமே;
    • நீர் நன்மையால் நிறைந்த காருணிய வேந்தரே.

  • Album: பாமாலைகள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 303 times