Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

நாற்பது நாள் ராப் பகல்


    • நாற்பது நாள் ராப் பகல்

    • 1. நாற்பது நாள் ராப் பகல்
    • வனவாசம் பண்ணினீர்;
    • நாற்பது நாள் ராப் பகல் 
    • சோதிக்கப்பட்டும் வென்றீர்.

    • 2. ஏற்றீர் வெயில் குளிரை
    • காட்டு மிருகத் துணை;
    • மஞ்சம் உமக்குத் தரை, 
    • கல் உமக்குப் பஞ்சணை.

    • 3. உம்மைப்போல நாங்களும்
    • லோகத்தை வெறுக்கவும்,
    • உபவாசம் பண்ணவும்
    • ஜெபிக்கவும் கற்பியும்.

    • 4. சாத்தான் சீறி எதிர்க்கும்
    • போதெம் தேகம் ஆவியை
    • சோர்ந்திடாமல் காத்திடும், 
    • வென்றீரே நீர் அவனை.

    • 5. அப்போதெங்கள் ஆவிக்கும் 
    • மா சமாதானம் உண்டாம்;
    • தூதர் கூட்டம் சேவிக்கும்
    • பாக்கியவான்கள் ஆகுவோம்.

  • Album: பாமாலைகள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 313 times