Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

பிளவுண்ட மலையே


    • பிளவுண்ட மலையே 
    • 1. பிளவுண்ட மலையே புகலிடம் ஈயுமே;
    • பக்கம் பட்ட காயமும் பாய்ந்த செந்நீர் வெள்ளமும்
    • பாவதோஷம் யாவையும் நீக்கும்படி அருளும்.

    • 2. எந்தக் கிரியை செய்துமே உந்தன் நீதி கிட்டாதே;
    • கண்ணீர் நித்தம் சொரிந்தும் கஷ்ட தவம் புரிந்தும்
    • பாவம் நீங்க மாட்டாதே நீரே மீட்பர் இயேசுவே.

    • 3. யாதுமற்ற ஏழை நான் , நாதியற்ற நீசன் தான்;
    • உம் சிலுவை தஞ்சமே , உந்தன் நீதி ஆடையே
    • தூய ஊற்றை அண்டினேன் தூய்மையாக்கேல் மாளுவேன்.

    • 4. நிழல் போன்ற வாழ்விலே கண்ணை மூடும் சாவிலே
    • கண்ணுக்கெட்டா லோகத்தில் , நடுத்தீர்வை தினத்தில்
    • பிளவுண்ட மலையே , புகலிடம் ஈயுமே. 
  • Album: பாமாலைகள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 3985 times