Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

ஆமென் , அல்லேலூயா !


    • ஆமென் , அல்லேலூயா !
    • பல்லவி
    • ஆமென் , அல்லேலூயா ! மகத்துவத் தம்பராபரா;
    • ஆமென் , அல்லேலூயா! ஜெயம் ! ஜெயம் ! அனந்த தோத்திரா 

    • அனுபல்லவி
    • ஓம் அனாதி தந்தார் , வந்தார் , இறந்
    • துயிர்த்தெழுந்தாரே , உன்னதமே - 


    • சரணங்கள்
    • 1. வெற்றிகொண் டார்ப்பரித்து - கொடும்வே
    • தானத்தைச் சங்கரித்து - முறித்து;
    • பத்ராசனக கிறிஸ்து - மரித்து
    • பாடுபட்டுத் தரித்து , முடித்தார் --- ஆமென்

    • 2. சாவின் கூர் ஒடிந்து , மடிந்து
    • தடுப்புச் சுவர் இடிந்து - விழுந்து
    • ஜீவனே விடிந்து - தேவாலயத்
    • திரை ரண்டாய்க் கிழிந்து ஒழிந்தது --- ஆமென்

    • 3. வேதம் நிறைவேற்றி - மெய்தோற்றி,
    • மீட்டுக் கரையேற்றி - பொய்மாற்றி,
    • பாவிகளைத் தேற்றி - கொண்டாற்றி
    • பத்ராசனத் தேற்றி வாழ்வித்தார் --- ஆமென்
  • Album: கீர்த்தனைகள், Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 2127 times