Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

இந்நாள் ரட்சிப்புக்


    • இந்நாள் ரட்சிப்புக் கேற்ற நல் நாள்
    • பல்லவி
    • இந்நாள் ரட்சிப்புக் கேற்ற நல் நாள்,
    • ஏற்ற நல் நாள் , ஏற்ற நல் நாள் 

    • அனுபல்லவி
    • சொன்னார் கிறிஸ்துனக்குக் கிருபையைச் சொரிந்து
    • பாடனு பவங்களை ஒழிப்போமோ? - யூத 

    • சரணங்கள்
    • 1. சந்தோஷந்தனைச் சொல்ல வந்தேன் - தேவ
    • சமாதான வார்த்தையைப் பெலனாகத் தந்தேன் --- இந்நாள்

    • 2. வாடித் திகைத்துப் புலம்பாதே - உன்தன்
    • மனதில் அவிசுவாசம் வைத்துக் கலங்காதே --- இந்நாள்

    • 3. உலகச் சிநேகம் வெகு கேடு - அதற்
    • குடந்தைப் படாமல் ஜீவ மார்க்கத்தைத்தேடு --- இந்நாள்

    • 4. இன்றுன் இரட்சகரிடம் திரும்பு - அவர்
    • இயற்றும் சம்பூரண ஜீவனை விரும்பு --- இந்நாள்

    • 5. இனிமேலாகட்டும் , என் றெண்ணாதே - பவ
    • இச்சைக் குட்பட்டால் , திரும்ப ஒண்ணாதே --- இந்நாள்

    • 6. கிறிஸ் தேசுவை உற்றுப்பாரு - அவர்
    • கிருபையாய்ச் சிந்தின ரத்தத்தைச் சேரு --- இந்நாள்

    • 7. பாவங்கள் அறச் சுத்திகரிப்பார் - உனைப்
    • பரிசுத்த வஸ்திரத்தால் அலங்கரிப்பார் --- இந்நாள்

    • 8. மகிமை நிறைந்த கிரீடஞ் சூடி - நித்திய 
    • வாழ்வை அருள்வார் உனக்கின்பங் கொண்டாடி --- இந்நாள்

    • 9. ஏசுபெருமானை நீ நம்பு - அவர்
    • என்றென்றைக்கும் உனக் கிரட்சிப்பின் கொம்பு --- இந்நாள்

  • Album: கீர்த்தனைகள், Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 557 times