Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

இவரே பெருமான்


    • இவரே பெருமான் 
    • பல்லவி
    • இவரே பெருமான் , மற்றப்
    • பேர் அலவே பூமான் - இவரே பெருமான்

    • சரணங்கள்
    • 1. கவலைக் கிடங்கொடுத் தறியார் - வேறு 
    • பவவினை யாதுமே தெரியார் - இப் 
    • புவனமீது நமக்குரியார் --- இவரே

    • 2. குருடர்களுக் குதவும் விழியாம் - பவக் 
    • கரும இருளை நீக்கும் ஒளியாம் - தெய்வம் 
    • இருக்குந் தலஞ்சல் வாசல் வழியாம் --- இவரே

    • 3. பலபிணி தீர்க்கும் பரிகாரி - சொல்லும்
    • வலமையில் மிக்க விபகாரி - எக்
    • குலத்துக்கும் நல்ல உபகாரி --- இவரே

    • 4. அறஞ் செய்வதினில் ஒரு சித்தன் - கொடு
    • மறம்விடு பவர்க்கருள் முத்தன் - இங்கே
    • இறந்தோர்க் குயிரீயும் கர்த்தன் --- இவரே

    • 5. அலகை தனை ஜெயித்த வீரன் - பவ
    • உலகை ரட்சித்த எழிற்பேரன் - விண்
    • ணுலகு வாழ் தேவ குமாரன் --- இவரே

    • 6. பொன்னுலகத் தனில்வாழ் யோகன் - அருள் 
    • துன்ன உலகில் நன்மைத் தேகன் - நம்பால் 
    • தன்னை யளித்த ஓர் தியாகன் --- இவரே

  • Album: கீர்த்தனைகள், Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 972 times