Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

இன்றைத்தினம்


    • இன்றைத்தினம் உன் அருள் ஈகுவாய்
    • பல்லவி
    • இன்றைத்தினம் உன் அருள் ஈகுவாய் , இயேசுநாதையா ,
    • இன்றைத்தினம் உன் அருள் ஈகுவாய் 

    • அனுபல்லவி
    • அன்றுன் உதிரம் நரர்க் கென்று சிந்தி மீட்டெனை
    • வென்றியுடன் ரட்சித்த நன்றி போலே எனக்கு --- இன்றை 

    • சரணங்கள்
    • 1. போன ராவில் என்னைக் கண் பார்த்தாய் - பலவிதமாம்
    • பொல்லா மோசங்களில் தற்காத்தாய் ;
    • ஈன சாத்தான் எனையே இடர்க்குள் அகப்படுத்தி ,
    • ஊனம் எனக்குச் செய்யா துருக்கமுடன் புரந்தாய் --- இன்றை

    • 2. கையிட்டுக் கொள்ளும் , என்றன் வேலை - யாவிலுமுன்றன்
    • கடைக்கண் ணோக்கி , அவற்றின் மேலே ,
    • ஐயா , நின் ஆசீர்வாதம் அருளி , என் மனோவாக்கு
    • மெய்யால் நின் மகிமையே விளங்கும்படி ஒழுக --- இன்றை

    • 3. எத்தனையோ விபத்தோர் நாளே - தஞ்சம் நீ என
    • எளியேன் அடைந்தேன் உன்றன் தாளே ;
    • பத்தர் பாலனா , எனைப் பண்பாய் ஒப்புவித்தேன் , உன்
    • சித்தம் எனது பாக்கியம் , தேவ திருக்குமாரா --- இன்றை

    • 4. பாவ சோதனைகளை வென்று , பேயுலகுடல்
    • பண்ணும் போர்களுக் கெதிர் நின்று ,
    • ஜீவ பாதையில் இன்றும் திடனாய் முன்னிட்டுச் செல்ல ,
    • தேவ சர்வாயுதத்தைச் சிறக்க எனக் களித்து --- இன்றை
  • Album: கீர்த்தனைகள், Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 371 times