Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

அக்கினி அபிஷேகம் ஈந்திடும்


    • அக்கினி அபிஷேகம் ஈந்திடும்
    • பல்லவி 
    • அக்கினி அபிஷேகம் ஈந்திடும்
    • தேவ ஆவியால் நிறைத்திடும்
    • தேவா தேவா இக்கணமே ஈந்திடும் 

    • சரணங்கள்
    • 1. பரமன் இயேசுவை நிறைத்தீரே 
    • பரிசுத்த ஆவியால் நிறைத்திடும் 
    • உந்தன் சீஷருக்களித்தீரெ
    • அன்பின் அபிஷேகம் ஈந்திடும்
    • தேவா தேவா இக்கணமே ஈந்திடும் --- அக்கினி

    • 2. சிம்சோன் கிதியோனை நிறைத்தீரே 
    • கர்த்தரின் வல்லமையால் நிறைத்திடும்
    • தீர்க்கன் எலிசாவுக் களித்தீரே
    • இரட்டிப்பின் வரங்களால் நிறைத்திடும்
    • தேவா தேவா இக்கணமே ஈந்திடும் --- அக்கினி

    • 3. அன்பர் இயேசுவின் நாமத்திலே
    • வன் துயர் பேய் பிணி நீங்கவே
    • அற்புதம் அடையாளம் நிகழ்ந்திடவே
    • பொற்பரன் ஆவியால் நிறைத்திடும் 
    • தேவா தேவா இக்கணமே ஈந்திடும் --- அக்கினி

    • 4. வானில் இயேசு வருகையிலே
    • நானும் மறுரூபம் ஆகவே
    • எந்தன் சாயல் மாறிடவே
    • மைந்தன் ஆவியால் நிறைத்திடும்
    • தேவா தேவா இக்கணமே ஈந்திடும் --- அக்கினி
  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 1237 times