Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

அழைக்கிறார்


    • அழைக்கிறார் அழைக்கிறார் அன்பாய்
    • பல்லவி 
    • அழைக்கிறார் அழைக்கிறார்
    • அன்பாய் இன்றே உன்னை
    • கல்லும் கரையும் கல்வாரியண்டை
    • கர்த்தர் அழைக்கிறார் 

    • சரணங்கள்
    • 1. கேட்டின் மகன் கெட்டழிந்தான்
    • கெட்ட குமாரனைப்போல்
    • பாவத்தின் சம்பளம் மரணமே
    • பாவத்தில் மாளாதே --- அழைக்கிறார்

    • 2. உந்தன் நீதி கந்தையாகும்
    • உன்னில் நன்மை ஒன்றில்லை
    • பாவஞ் செய்தே மகிமையிழந்தாய்
    • பாவியை நேசித்தார் --- அழைக்கிறார்

    • 3. பாவங்களை மறைப்பவன்
    • பாரில் வாழ்வை அடையான்
    • சன்மார்க்கன் துன்மார்க்கன் இருவரும்
    • சங்காரம் அடைவார் --- அழைக்கிறார்

    • 4. நானே வழி சத்தியமும்
    • நித்திய ஜீவன் என்றார்
    • இயேசுவை நம்பி நீ ஜெபிப்பதால்
    • இரட்சணியம் அடைவாய் --- அழைக்கிறார்

    • 5. காலங்களும் கடந்திடும்
    • வால வயதும் மாறும்
    • தேவனைச் சந்திக்கும் வேளையிதே
    • தேடி நீ வாராயோ --- அழைக்கிறார்
  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 745 times