Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

அழகாய் நிற்கும் யார் இவர்கள்


    • அழகாய் நிற்கும் யார் இவர்கள்
    • பல்லவி 
    • அழகாய் நிற்கும் யார் இவர்கள்?
    • திரளாய் நிற்கும் யார் இவர்கள்?
    • சேனைத் தலைவராம் இயேசுவின் பொற்றளத்தில்
    • அழகாய் நிற்கும் யார் இவர்கள்? 

    • சரணங்கள்
    • 1. ஒரு தாலந்தோ இரண்டு தாலந்தோ 
    • ஐந்து தாலந்தோ உபயோகித்தோர் 
    • சிறிதானதோ பெரிதானதோ
    • பெற்ற பணி செய்து முடித்தோர் --- அழகாய்

    • 2. காடு மேடு கடந்து சென்று 
    • கர்த்தர் அன்பைப் பகிர்ந்தவர்கள்
    • உயர்வினிலும் தாழ்வினிலும் 
    • ஊக்கமாக ஜெபித்தவர்கள் --- அழகாய்

    • 3. தனிமையிலும் வறுமையிலும்
    • லாசரு போன்று நின்றவர்கள்
    • யாசித்தாலும் போஷித்தாலும்
    • விசுவாசத்தைக் காத்தவர்கள் --- அழகாய்

    • 4. எல்லா ஜாதியார் எல்லாக் கோத்திரம்
    • எல்லா மொழியும் பேசும் மக்களாம்
    • சிலுவையின் கீழ் இயேசு இரத்தத்தால்
    • சீர் போராட்டம் செய்து முடித்தோர் --- அழகாய்

    • 5. வெள்ளை அங்கியைத் தரித்துக்கொண்டு
    • வெள்ளைக் குருத்தாம் ஓலை பிடித்து
    • ஆர்ப்பரிப்பார் சிங்காசனம் முன்பு
    • ஆட்டுக்குட்டிக்கே மகிமையென்று --- அழகாய்

    • 6. இனி இவர்கள் பசி அடையார்
    • இனி இவர்கள் தாகமடையார்
    • வெயிலாகிலும் அனலாகிலும்
    • வேதனையை அளிப்பதில்லை --- அழகாய்

    • 7. ஆட்டுக்குட்டிக்கு தான் இவர் கண்ணீரை
    • அற அகற்றித் துடைத்திடுவார்
    • அழைத்துச் செல்வார் இன்ப ஊற்றுக்கே
    • அள்ளிப் பருக இயேசு தாமே --- அழகாய்

  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 23073 times