Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

அடைக்கலமே உமதடிமை நானே


    • அடைக்கலமே உமதடிமை நானே
    • பல்லவி 
    • அடைக்கலமே உமதடிமை நானே
    • ஆர்ப்பரிப்பேனே அகமகிழ்ந்தே
    • கர்த்தர் நீர் செய்த நன்மைகளையே
    • நித்தம் நித்தம் நான் நினைப்பேனே 

    • சரணங்கள்
    • 1. அளவற்ற அன்பினால் அணைப்பவரே 
    • எண்ணற்ற நன்மையால் நிறைப்பவரே 
    • மாசில்லாத நேசரே மகிமைப் பிரதாபா
    • பாசத்தால் உம் பாதம் பற்றிடுவேனே --- ஆ

    • 2. கர்த்தரே உம் செய்கைகள் பெரியவைகளே 
    • சுத்தரே உம் செயல்கள் மகத்துவமானதே
    • நித்தியரே உம் நியாயங்கள் என்றும் நிற்குமே
    • பக்தரின் பேரின்ப பாக்கியமிதே --- ஆ

    • 3. என்னை என்றும் போதித்து நடத்துபவரே
    • கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுபவரே
    • நடக்கும் வழிதனைக் காட்டுபவரே
    • நம்பி வந்தோனைக் கிருபை சூழ்ந்துக்கொள்ளுதே --- ஆ

    • 4. கரம் பற்றி நடத்தும் கர்த்தர் நீரல்லோ
    • கூப்பிட்ட என்னை குணமாக்கினீரல்லோ
    • குழியில் விழாதபடி காத்துக்கொண்டீரே
    • அழுகையைக் களிப்பாக மாற்றி விட்டீரே --- ஆ

    • 5. பாவங்களைப் பாராதென்னைப் பற்றிக் கொண்டீரே
    • சாபங்களை நீக்கி சுத்த உள்ளம் தந்தீரே
    • இரட்சணியத்தின் சந்தோஷத்தை திரும்பத் தந்தீரே
    • உற்சாக ஆவி என்னைத் தாங்கச் செய்தீரே --- ஆ
    • toilax 5mg bhalsbrand.site toilax spc
  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 12882 times