Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

அனாதி தேவன் உன் அடைக்கலமே


    • அனாதி தேவன் உன் அடைக்கலமே
    • பல்லவி
    • அனாதி தேவன் உன் அடைக்கலமே
    • அவர் நித்திய புயங்கள் உன் ஆதாரமே 

    • அனுபல்லவி
    • இந்த தேவன் என்றென்றுமுள்ள
    • சதா காலமும் நமது தேவன்
    • மரண பரியந்தம் நம்மை நடத்திடுவார் 

    • சரணங்கள்
    • 1. காருண்யத்தாலே இழுத்துக் கொண்டார் 
    • தூய தேவ அன்பே 
    • இவ்வனாந்திரத்தில் நயங்காட்டி உன்னை
    • இனிதாய் வருந்தி அழைத்தார் --- இந்த

    • 2. கானகப் பாதை காரிருளில் 
    • தூய தேவ ஒளியே
    • அழுகை நிறைந்த பள்ளத் தாக்குகளை
    • அரும் நீரூற்றாய் மாற்றினாரே --- இந்த

    • 3. கிருபை கூர்ந்து மன துருகும்
    • தூய தேவ அன்பே
    • உன் சமாதானத்தின் உடன்படிக்கைகளை
    • உண்மையாய் கர்த்தர் காத்துக்கொள்வார் --- இந்த 

    • 4. இப்புவி யாத்திரை கடந்திடுவாய்
    • தூய தேவ தயவால்
    • கடும் கானகத்தில் கர்த்தர் மார்பினிலே
    • கிடைக்கும் இளைப்பாறுதலே --- இந்த

    • 5. வறண்ட வாழ்க்கை செழித்திடுமே
    • தூய தேவ அருளால்
    • நித்திய மகிழ்ச்சி தலைமேல் இருக்கும்
    • சஞ்சலம் தவிப்பும் ஓடிப்போம் --- இந்த

    • 6. ஆனந்தம் பாடித் திரும்பியே வா
    • தூய தேவ பெலத்தால்
    • சீயோன் பர்வதம் உன்னைச் சேர்த்திடுவார்
    • சந்ததம் மகிழ்ச்சி அடைவாய் --- இந்த

  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 17512 times