Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

ஆயிரம் ஆயிரம் பாடல்களை


    • ஆயிரம் ஆயிரம் பாடல்களை
    • 1. ஆயிரம் ஆயிரம் பாடல்களை
    • ஆவியில் மகிழ்ந்தே பாடுங்களேன்
    • யாவரும் தேமொழிப் பாடல்களால் 
    • இயேசுவைப் பாடிட வாருங்களேன் 

    • பல்லவி
    • அல்லேலூயா ! அல்லேலூயா ! 
    • என்றெல்லாரும் பாடிடுவோம் 
    • அல்லலில்லை ! அல்லலில்லை !
    • ஆனந்தமாய்ப் பாடிடுவோம் 

    • 2. புதிய புதிய பாடல்களைப் 
    • புனைந்தே பண்களும் சேருங்களேன்
    • துதிகள் நிறையும் கானங்களால்
    • தொழுதே இறைவனைக் காணுங்களேன்

    • 3. நெஞ்சின் நாவின் நாதங்களே
    • நன்றி கூறும் கீதங்களால்
    • மிஞ்சும் ஓசைத் தாளங்கலால் 
    • மேலும் பரவசம் கூடுங்களேன்

    • 4. எந்த நாளும் காலங்களும் 
    • இறைவனைப் போற்றும் நேரங்களே
    • சிந்தை குளிர்ந்தே ஆண்டுகளாய்
    • சீயோனின் கீதம் பாடுங்களேன்
  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 702 times