Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

ஆனந்தமாய் நாமே ஆர்ப்பரிப்போமே


    • ஆனந்தமாய் நாமே ஆர்ப்பரிப்போமே
    • 1. ஆனந்தமாய் நாமே ஆர்ப்பரிப்போமே
    • அருமையாம் இயேசு நமக்களித்த
    • அளவில்லாக் கிருபை பெரிதல்லவோ
    • அனுதின ஜீவியத்தில் 

    • பல்லவி
    • ஆத்துமமே என் முழு உள்ளமே 
    • உன் அற்புத தேவனையே ஸ்தோத்திரி 
    • பொங்கிடுதே என் உள்ளத்திலே
    • பேரன்பின் பெரு வெள்ளமே 

    • 2. கருணையாய் இதுவரை கைவிடாமலே
    • கண்மணிபோல் எமைக் காத்தாரே
    • கவலைகள் போக்கி கண்ணீர் துடைத்தார்
    • கருத்துடன் பாடிடுவோம் --- ஆத்துமமே

    • 3. படகிலே படுத்து உறங்கினாலும்
    • கடும் புயல் அடித்து கவிழ்த்தினாலும்
    • கடலையுங் காற்றையும் அமர்த்தியெமைக் 
    • காப்பாரே அல்லேலூயா --- ஆத்துமமே

    • 4. யோர்தானைக் கடப்போம் அவர் பெலத்தால்
    • எரிகோவைத் தகர்ப்போம் அவர் துதியால்
    • இயேசுவின் நாமத்தில் ஜெயம் எடுத்தே
    • என்றென்றுமாய் வாழ்வோம் --- ஆத்துமமே

    • 5. பரிசுத்தவான்களின் பாடுகளெல்லாம் 
    • அதி சீக்கிரமாய் முடிகிறதே
    • விழிப்புடன் கூடித் தரித்திருப்போம்
    • விரைந்தவர் வந்திடுவார் --- ஆத்துமமே

  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 4922 times