Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

இம்மானுவேலின் இரத்தத்தால்


    • இம்மானுவேலின் இரத்தத்தால்
    • 1. இம்மானுவேலின் இரத்தத்தால்
    • நிறைந்த ஊற்றுண்டே 
    • எப்பாவத் தீங்கும் அதினால் 
    • நிவிர்த்தியாகுமே 

    • பல்லவி
    • நான் நம்புவேன் ! நான் நம்புவேன் ! 
    • இயேசு எனக்காய் மரித்தார் - மரித்தார் 
    • பாவம் நீங்கச் சிலுவையில் உதிரம் சிந்தினார்
    • தேவனைத் துதியுங்கள் 

    • 2. மா பாவியான கள்ளனும் 
    • அவ்வூற்றில் மூழ்கினான்
    • மன்னிப்பும் மோட்சானந்தமும்
    • அடைந்து பூரித்தான் --- நான்

    • 3. அவ்வாறே நானும் யேசுவால்
    • விமோசனம் பெற்றேன்
    • என் பாவம் நீங்கிப் போனதால்
    • ஓயாமல் பாடுவேன் --- நான்

    • 4. காயத்தில் ஓடும் ரத்தத்தை 
    • விஸ்வாசத்தால் கண்டேன்
    • ஒப்பற்ற மீட்பர் நேசத்தை
    • எங்கும் பிரஸ்தாபிப்பேன் --- நான்

    • 5. பின் விண்ணில் வல்ல நாதரை 
    • நான் கண்டு பூரிப்பேன்
    • அங்கென்னை மீட்ட நேசத்தைக்
    • கொண்டாடிப் போற்றுவேன் --- நான்
  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 2325 times