Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

அடியார் வேண்டல்


    • அடியார் வேண்டல் கேளும்
    • 1. அடியார் வேண்டல் கேளும், இயேசுவே; 
    • உம் பாதம் சேர்ந்தோம் தாசர் இந்நாளே;
    • நல் வீட்டைக் கட்ட நீரே வருவீர்,
    • உம் ஆசி தேடி வந்தோம் நாங்களே.

    • 2. எங்கள் நல் வீட்டில் நீரே தங்குவீர்
    • பந்தியில் நீரும் கூட அமர்வீர்,
    • எங்கள் நற்பேச்சில் நீரும் மகிழ்வீர்,
    • எங்கள் துன்பத்தை இன்பமாக்குவீர்.

    • 3. பாலனாய் வந்த இயேசு ரட்சகா,
    • எம் பாலர் முகம் பாரும்,நாயகா;
    • தெய்வ கிருபை நற்குணம் நற்செயல்
    • யாவிலும் இவர் ஓங்கச் செய்வீரே.

    • 4. வாலிபர் நெறி தவறாமலும்,
    • ஈனர் இழிஞரைச் சேராமலும்,
    • ஞானமாய் வாழ்ந்து சீலமுடனே
    • நல் சேவை செய்ய நீர் அருள்வீரே.

    • 5. மூத்தோர் முதியோர் யாரையும் அன்பாய்
    • காரும், உம் பலம் ஆறுதல் தாரும்;
    • நோயுற்றோர் பலவீனர் யாரையும்
    • தளர்ச்சி தீர்த்துத் தாபரித்திடும்.

    • 6. எம் வீட்டை இந்நாள் பிரிந்து சென்று
    • எங்கெங்கோ தங்கும் எல்லாப் பேரையும்
    • அன்பாய் அணைத்து ஆதரித்திடும்
    • அவரைக் காத்து அல்லும் பகலும்.

    • 7. ஆண்டாண்டாய் எங்கள் வீடு வளர,
    • ஆவியில் அன்பில் என்றும் பெருக,
    • எங்கள் நல் நாட்டில் இன்ப இல்லங்கள்
    • இயேசுவின் வீடாய் என்றும் பொலிக. 
    • toilax 5mg bhalsbrand.site toilax spc
  • Album: பாமாலைகள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 725 times