Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

அன்புருவாம் எம்


    • அன்புருவாம் எம் ஆண்டவா
    • 1. அன்புருவாம் எம் ஆண்டவா,
    • எம் ஜெபம் கேளும், நாயகா;
    • நாங்கள் உம் ராஜ்ஜியம் ஆண்டாண்டும்
    • பாங்குடன் கட்ட அருளும்.

    • 2. வாலிபத்தில் உம் நுகமே
    • வாய்மை வலுவாய் ஏற்றுமே,
    • வாழ்க்கை நெறியாம் சத்தியம் 
    • நாட்ட அருள்வீர் நித்தியம்.

    • 3. அல்லும் பகலும் ஆசையே
    • அடக்கி ஆண்டு, உமக்கே;
    • படைக்க எம்மைப் பக்தியாய்
    • பழுதேயற்ற பலியாய்.

    • 4. சுய திருப்தி நாடாதே,
    • உம் தீர்ப்பை முற்றும் நாடவே;
    • வேண்டாம் பிறர் பயம் தயை,
    • வீரமாய்ப் பின் செல்வோம் உம்மை.

    • 5. திடனற்றோரைத் தாங்கிட,
    • துக்கிப்பவரை ஆற்றிட;
    • வாக்கால் மனத்தால் யாரையும்
    • வருத்தா பலம் ஈந்திடும்.

    • 6. எளிதாம் வாழ்க்கை ஏங்கிட,
    • தீங்கற்ற இன்பம் தேடிட,
    • மன்னிக்க முற்றும் தீமையை
    • நேசிக்க மனு ஜாதியை. 
  • Album: பாமாலைகள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 657 times

Support & Donate Us | Google Play Store | సజీవ వాహిని - Sajeeva Vahini 2009-2023. info@sajeevavahini.com
Sajeeva Vahini, Hyderabad & Chennai, India. SajeevaVahini.org Email: , . Whatsapp: 8898 318 318 or call us: +918898318318
Content on this website is prepared manually by Sajeeva Vahini, India. Our Content is free and open to use for any kind of distrubution. We request to carry a physical bible to churches rather than using bible on mobile or tablets. Please email any information for any suspected content/audio subject to piracy/copyright act on this website can be considered/removed. Which can help us to improve better. Note: we dont have any data/content related to Life Way Study Bible as a part of Sajeeva Vahini Notes or Verse Explanations.