Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

ஆ இயேசுவே, நீர்


    • ஆ இயேசுவே, நீர்
    • 1. ஆ இயேசுவே, நீர்
    • என் பலியானீர்;
    • பாவி உம்மை அகற்ற, கல்வாரி சென்றீர்;
    • மன்றாடிடுவீர்
    • இப்பாவிக்காய் நீர்;
    • என்னைக் கொன்றோருக்காய்
    • உயிர் ஈந்தேன் என்பீர்.

    • 2. இறங்கிடுமேன்,
    • அகற்றிடுமேன்
    • உந்தன் அன்பினால் என்தன் உட்கடினத்தை;
    • சிலுவை அன்பால்
    • என்னை இழுத்தால்
    • ஆவேன் விடுதலை பாவியாம்
    • அடிமை.

    • 3. கோபம் பெருமை
    • போக்கும் சிலுவை;
    • அகற்றுமே தூய ரத்தமும்
    • தோஷத்தை;
    • தீய மனத்தை
    • பாவ பாரத்தை
    • அகற்றி, ரத்தத்தால் சேர்த்திடும்
    • உம்மண்டை.

    • 4. தூய வெண்மையே
    • இப்போ இப்போதே;
    • உந்தன் ரத்தத்தால் தூய்மையாவேன் பாவியே;
    • தூயோன் ஆக்குவீர்
    • முற்றும் மாற்றுவீர்;
    • உந்தன் சாயல் என் வாழ்க்கையில்
    • உண்டாக்குமே.

    • 5. உம் ரத்தம் என்னில்
    • நிலைத்திருப்பின்,
    • ஒழிந்திடும் எப்பாவம் பலவீனமும்
    • பிதாவின் முன்னர்
    • சகாயராம் நீர்,
    • சுதா, பாவியேனை உம் அன்பால்
    • வாழ்விப்பீர். 
  • Album: பாமாலைகள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 572 times