Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

ஆ, சகோதரர்


    • ஆ, சகோதரர் ஒன்றாய்
    • 1. ஆ, சகோதரர் ஒன்றாய்
    • ஏகமான சிந்தையாய்
    • சஞ்சரித்தல், எத்தனை
    • நேர்த்தியான இனிமை.

    • 2. அது ஆரோன் சிரசில்
    • வார்த்துக் கீழ்வடிகையில்,
    • கந்தம் வீசும் எண்ணெயே,
    • போன்றதாயிருக்குமே.

    • 3. அது எர்மோன்மேலேயும்
    • சீயோன் மேடுகளிலும்
    • பெய்கிற ஆகாசத்து
    • நற்பனியைப்போன்றது.

    • 4. அங்கேதான் தயாபரர்
    • ஆசீர்வாதம் தருவார்,
    • அங்கிப்போதும் என்றைக்கும்
    • வாழ்வுண்டாகிப் பெருகும்.

    • 5. மேய்ப்பரே, நீர் கிருபை
    • செய்து, சிதறுண்டதை
    • மந்தையாக்கி, யாவையும்
    • சேர்த்தணைத்துக்கொள்ளவும்.

    • 6. எங்கள் நெஞ்சில் சகல
    • நற்குணங்களும் வர,
    • தெய்வ அன்பை அதிலே
    • ஊற்றும், இயேசு கிறிஸ்துவே.

    • 7. நீரே நெஞ்சை நெஞ்சுடன்
    • கட்டி, நேசத்தின் பலன்
    • நன்மை தீமை நாளிலும்
    • காணக் கட்டளையிடும்.

    • 8. மூன்றொன்றாகிய பிதா
    • மைந்தன் ஆவியும் எல்லா
    • நாளும் ஒருமைப்படும்
    • போல் இம்மந்தை ஒன்றவும்.
  • Album: பாமாலைகள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 420 times