Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

ஆண்டவா பிரசன்னமாகி


    • ஆண்டவா பிரசன்னமாகி
    • 1. ஆண்டவா பிரசன்னமாகி
    • ஜீவன் ஊதி உயிர்ப்பியும்;
    • ஆசை காட்டும் தாசர்மீதில்
    • ஆசீர்வாதம் ஊற்றிடும்.

    •       அருள்மாரி எங்கள் பேரில்
    •       வருஷிக்கப் பண்ணுவீர்.
    •       ஆசையோடு நிற்கிறோமே,
    •       ஆசீர்வாதம் ஊற்றுவீர்.

    • 2. தேவரீரின் பாதத்தண்டை
    • ஆவலோடே கூடினோம்;
    • உந்தன் திவ்விய அபிஷேகம்
    • நம்பி நாடி அண்டினோம்.

    • 3. ஆண்டவா , மெய்பக்தர் செய்யும்
    • வேண்டுகோளைக் கேட்கிறீர்;
    • அன்பின் ஸ்வாலை எங்கள் நெஞ்சில்
    • இன்று மூட்டி நிற்கிறீர்.

    • 4. தாசர் தேடும் அபிஷேகம்
    • இயேசுவே! கடாட்சியும்;
    • பெந்தே கொஸ்தின் திவ்விய ஈவை
    • தந்து ஆசீர்வதியும். 
  • Album: பாமாலைகள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 844 times