Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

ஆத்மமே, உன் ஆண்டவரின்


    • ஆத்மமே, உன் ஆண்டவரின்
    • 1. ஆத்மமே, உன் ஆண்டவரின்
    • திருப்பாதம் பணிந்து,
    • மீட்பு, சுகம், ஜீவன், அருள்
    • பெற்றதாலே துதித்து,
    • அல்லேலுயா, என்றென்றைக்கும்
    • நித்திய நாதரைப்போற்று.

    • 2. நம் பிதாக்கள் தாழ்வில் பெற்ற
    • தயை நன்மைக்காய் துதி;
    • கோபங்கொண்டும் அருள் ஈயும்
    • என்றும் மாறாதோர் துதி;
    • அல்லேலுயா, அவர் உண்மை
    • மா மகிமையாம் துதி.

    • 3. தந்தை போல் மா தயை உள்ளோர்;
    • நீச மண்ணோர் நம்மையே
    • அன்பின் கரம் கொண்டு தாங்கி
    • மாற்றார் வீழ்த்திக் காப்பாரே!
    • அல்லேலுயா, இன்னும் அவர்
    • அருள் விரிவானதே.

    • 4. என்றும் நின்றவர் சமுகம்
    • போற்றும் தூதர் கூட்டமே,
    • நாற்றிசையும் நின்றெழுத்து
    • பணிவர் நீர் பக்தரே;
    • அல்லேலுயா, அனைவோரும்
    • அன்பின் தெய்வம் போற்றுமே.
  • Album: பாமாலைகள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 408 times