Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

ஆ பாக்கிய தெய்வ பக்தரே


    • ஆ பாக்கிய தெய்வ பக்தரே
    • 1. ஆ பாக்கிய தெய்வ பக்தரே;
    • உம் நீண்ட போர் முடிந்ததே;
    • வெற்றிகொண்டே, சர்வாயுதம்
    • வைத்துவிட்டீர் கர்த்தாவிடம்;
    • சீர் பக்தரே, அமர்ந்து நீர்
    • இயேசுவின் பாதத்தில் வாழ்வீர்.

    • 2. ஆ பாக்கிய தெய்வ பக்தரே;
    • மா அலுப்பாம் பிரயாணத்தை
    • முடித்து, இனி அலைவும்
    • சோர்வும் இல்லாமல் வாழ்ந்திடும்;
    • சீர் பக்தரே, அமர்ந்து நீர்
    • நல் வீட்டில் இளைப்பாறுவீர்.

    • 3. ஆ பாக்கிய தெய்வ பக்தரே;
    • இஜ்ஜீவ யாத்திரை ஒய்ந்ததே;
    • இப்போதபாய புயலும்
    • உம்மைச் சேராது கிஞ்சித்தும்;
    • சீர் பக்தரே, அமர்ந்து நீர்
    • இன்பத் துறையில் தங்குவீர்.

    • 4. ஆ பாக்கிய தெய்வ பக்தரே;
    • உம் மேனி மண்ணில் தூங்கவே,
    • மாண்பாய் எழும்புமளவும்
    • விழித்துக் காத்துக்கொண்டிரும்;
    • சீர் பக்தரே, மகிழ்ந்து நீர்
    • நம் ராஜா வருவார் என்பீர்.

    • 5. கேளும், தூயோரின் நாதரே,
    • பரிந்து பேசும் மீட்பரே,
    • வாழ் நாள் எல்லாம், நல்லாவியே,
    • சீர் பக்தரோடு நாங்களும்
    • மேலோகில் சேரச் செய்திடும். 
  • Album: பாமாலைகள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 501 times