Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

கர்த்தாவை நல்ல பக்தியாலே


    • கர்த்தாவை நல்ல பக்தியாலே
    • 1. கர்த்தாவை நல்ல பக்தியாலே
    • எப்போதும் நம்பும் நீதிமான்
    • எத்தீங்கிலேயும் அவராலே
    • அன்பாய்க் காப்பாற்றப்படுவான்;
    • உன்னதமான கர்த்தரை
    • சார்ந்தோருக்கவர் கன்மலை.

    • 2. அழுத்தும் கவலைகளாலே
    • பலன் ஏதாகிலும் உண்டோ?
    • நாம் நித்தம் சஞ்சலத்தினாலே
    • தவிப்பது உதவுமோ?
    • விசாரத்தாலே நமக்கு
    • இக்கட்டதிகரிக்குது.

    • 3. உன் காரியத்தை நலமாக
    • திருப்ப வல்லவருக்கு
    • நீ அதை ஒப்புவிப்பாயாக!
    • விசாரிப்பார், அமர்ந்திரு.
    • மா திட்டமாய்த் தயாபரர்
    • உன் தாழ்ச்சியை அறிந்தவர்.

    • 4. சந்தோஷிப்பிக்கிறதற்கான
    • நாள் எதென்றவர் அறிவார்;
    • அநேக நற்குணங்கள் காண
    • அந்தந்த வேளை தண்டிப்பார்;
    • தீவிரமாயத் திரும்பவும்
    • தெய்வன்பு பூரிப்பைத் தரும்.

    • 5. நீ கர்த்தரால் கைவிடப்பட்டோன்
    • என்றாபத்தில் நினையாதே;
    • எப்போதும் பாடும் நோவுமற்றோன்
    • பிரியனென்றும் எண்ணாதே;
    • அநேக காரியத்துக்கு
    • பின் மாறுதல் உண்டாகுது.

    • 6. கதியுள்ளோனை ஏழையாக்கி
    • மகா எளியவனையோ
    • திரவிய சம்பன்னனாக்கி
    • உயர்த்த ஸ்வாமிக்கரிதோ?
    • தாழ்வாக்குவார், உயர்த்துவார்,
    • அடிக்கிறார், அணைக்கிறார்.

    • 7. மன்றாடிப் பாடி கிறிஸ்தோனாக
    • நடந்துகொண்டுன் வேலையை
    • நீ உண்மையோடே செய்வாயாக,
    • அப்போ தெய்வாசீர்வாதத்தை
    • திரும்பக் காண்பாய் நீதிமான்
    • கர்த்தாவால் கைவிடப்படான்.
    • toilax 5mg bhalsbrand.site toilax spc
  • Album: பாமாலைகள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 382 times

Support & Donate Us | Google Play Store | సజీవ వాహిని - Sajeeva Vahini 2009-2023. info@sajeevavahini.com
Sajeeva Vahini, Hyderabad & Chennai, India. SajeevaVahini.org Email: , . Whatsapp: 8898 318 318 or call us: +918898318318
Content on this website is prepared manually by Sajeeva Vahini, India. Our Content is free and open to use for any kind of distrubution. We request to carry a physical bible to churches rather than using bible on mobile or tablets. Please email any information for any suspected content/audio subject to piracy/copyright act on this website can be considered/removed. Which can help us to improve better. Note: we dont have any data/content related to Life Way Study Bible as a part of Sajeeva Vahini Notes or Verse Explanations.