Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

ஆ! அம்பர உம்பரமும் புகழுந்திரு


    • ஆ! அம்பர உம்பரமும் புகழுந்திரு
    • பல்லவி
    • ஆ! அம்பர உம்பரமும் புகழுந்திரு
    • ஆதிபன் பிறந்தார் 

    • அனுபல்லவி
    • ஆதிபன் பிறந்தார் - அமலாதிபன் பிறந்தார்


    • சரணங்கள்
    • 1. அன்பான பரனே! - அருள் மேவுங் காரணனே! - நவ
    • அச்சய சச்சித - ரட்சகனாகிய
    • உச்சிதவரனே! --- ஆ! அம்பர

    • 2. ஆதம் பவமற, - நீதம் நிறைவேற, - அன்று 
    • அல்லிராவினில் - தொல்லையிடையினில்
    • புல்லணையிற் பிறந்தார். --- ஆ! அம்பர

    • 3. ஞானியர் தேட , - வானவர் பாட , -மிக
    • நன்னய , உன்னத - பன்னரும் ஏசையா
    • இந்நிலம் பிறந்தார். --- ஆ! அம்பர

    • 4. கோனவர் நாட , - தானவா கொண்டாட - என்று
    • கோத்திரர் தோத்திரஞ் சாற்றிட வே , யூத
    • கோத்திரன் பிறந்தார். --- ஆ! அம்பர

    • 5. விண்ணுடு தோண , - மன்னவர் பேண , - ஏரோது
    • மைந்தனின் சிந்தையழுந்திக் கலங்கிட
    • விந்தையாய்ப் பிறந்தார். --- ஆ! அம்பர
  • Album: கீர்த்தனைகள், Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 605 times