Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

ஆத்துமமே , என் முழு உள்ளமே


    • ஆத்துமமே , என் முழு உள்ளமே 
    • பல்லவி
    • ஆத்துமமே , என் முழு உள்ளமே - உன்
    • ஆண்டவரைத் தொழு தேத்து -இந்நாள் வரை
    • அன்பு வைத் தாதரித்த - உன்
    • ஆண்டவரைத் தொழுதேத்து 

    • சரணங்கள்
    • 1. போற்றிடும் வானோர் , பூதலத்துள்ளோர் 
    • சாற்றுதற் கரிய தன்மையுள்ள --- ஆத்துமமே

    • 2. தலை முறை தலை முரை தாங்கும் விநோத
    • உலக முன் தோன்றி ஒழியாத --- ஆத்துமமே

    • 3. தினம் தினம் உலகில் நீ செய் பலவான 
    • வினை பொறுத் தருளும் , மேலான --- ஆத்துமமே

    • 4. வாதை , நோய் , துன்பம் மாற்றி , அனந்த 
    • ஓதரும் தயைசெய் துயிர் தந்த --- ஆத்துமமே

    • 5. உற்றுனக் கிரங்கி உரிமை பாராட்டும், 
    • முற்றும் கிருபையினால் முடி சூட்டும் --- ஆத்துமமே

    • 6. துதி மிகுந்தேறத் தோத்தரி தினமே,
    • இதயமே , உள்ளமே , என் மனமே --- ஆத்துமமே
  • Album: கீர்த்தனைகள், Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 23405 times