Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

அந்த நாள் பாக்கிய நாள்


    • அந்த நாள் பாக்கிய நாள்
    • பல்லவி
    • அந்த நாள் பாக்கிய நாள் - நான் மீட்கப்பட்ட 
    • அந்த நாள் பாக்கிய நாள் 

    • அனுபல்லவி
    • அந்தநாள் ஆனந்தநாள், அருமை இரட்சகரென்னை 
    • அன்போடழைத்தெனது அசுத்தங்கள் நீக்கின நாள் --- அந்த 

    • சரணங்கள்
    • 1. அன்றே எனக்குப் பேதித்தார் - அவர் வழியில்
    • அநுதினம் செல்லக் கற்பித்தார்;
    • என்றும் அவர்மேல் சார்ந்தே இன்ப ஜீவியம் செய்ய
    • ஏவினார் என் இரட்சகர், எங்கும் எடுத்துரைப்பேனே --- அந்த

    • 2. என்றனை அன்றே இழுத்தார்- தமதன்பினால்
    • இசைவாய்த் தம்முடன் இணைத்தார்;
    • சொந்தம் நான் அவருக்குச் சொந்தம் அவர் எனக்கு,
    • இந்த உறுதிபண்ணி இனிய ஐக்கியம் பெற்றேன் --- அந்த

    • 3. ஆறுதல்களால் நிறைந்தேன் - அளவில்லாத
    • ஆசிகளினால் மகிழ்ந்தேன்;
    • தாறுமாறான உள்ளம் மாறுதலை யடைந்து
    • மாறாத யேசுவினில் மகிமையாய்த் தங்கப் பெற்றேன் --- அந்த

    • 4. அந்நாளில் வாக்குப் பண்ணினேன் - உறுதியாக
    • எந்நாளும் நான் புதுப்பிப்பேன்;
    • சொன்ன இவ்வாக்கை நிதம் , சுத்தமாய் நிறைவேற்ற
    • உன்னத பலம் தாராய் , என்னையாட்கொண்ட தேவா --- அந்த
    • toilax 5mg bhalsbrand.site toilax spc
      methotrexat grapefruit forstoppelseburp.site methotrexat 7 5
  • Album: கீர்த்தனைகள், Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 875 times