Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

இம்மட்டும் ஜீவன் தந்த


    • இம்மட்டும் ஜீவன் தந்த
    • பல்லவி
    • இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை அத்தியந்த
    • எண்ணமாய்த் தோத்தரிப்போமாக 

    • அனுபல்லவி
    • நம்மை ரட்சிக்க வந்து தம்மை பலியாய்த் தந்து
    • நற்சுகம் மேவவும் அற்புதமாகவும். --- இம்மட்டும் 

    • சரணங்கள்
    • 1. காலம்சொல் போல் கழியும், தண்ணீரைப்போல் வடியும்,
    • கனாவைப் போலேயும் ஒழியும்;
    • வாலிபமும் மறையும், சீலம் எல்லாம் குறையும், 
    • மண்னின் வாழ் வொன்றும் நிற்க மாட்டாது;
    • கோலப் பதுமைக்கும், நீர்க குமிழிக்கும், புகைக்குமே
    • கொண்ட உலகத்தில் அண்டபரன் எமைக் 
    • கண்டு கருணைகள் விண்டு தயவுடன். ---- இம்மட்டும்

    • 2. பலவித இக்கட்டையும் திகில்களையும் கடந்தோம் ;
    • பரம பாதையைத் தொடர்ந்தோம் ;
    • வலிய தீமையை வென்றோம் , நலியும் ஆசையைக் கொன்றோம் ,
    • வஞ்சர் பகைக்கும் தப்பி நின்றோம் ;
    • கலிஎன்ற தெல்லாம் விண்டோம் , கர்த்தாவின் மீட்பைக் கண்டோம்;
    • காய்ந்த மனதொடு பாய்ந்துவிழு கணம்
    • சாய்ந்து கெடவும் ஆராய்ந்து நெறியுடன் --- இம்மட்டும்

    • 3. சனசேதம் வருவிக்கும் , கேடுகட்கோர் முடிவு
    • தந்து , நொறுங்கினதைக் கட்டிக்
    • கன சபையை ஆதரித் தன்பாய் ஆசீர்வதித்துக்
    • கண்ணோக்கி எல்லார்மேல் அன்றன்று
    • தினமும் அருள் உதிக்கச் செய்து , தமது தேவ
    • சிந்தை யினோடதி விந்தையதாய் உயிர்
    • மைந்தனால் எங்களை இந்த வினோதமாய் --- இம்மட்டும்

  • Album: கீர்த்தனைகள், Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 818 times