Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

அந்தோ கல்வாரியில்


    • அந்தோ கல்வாரியில் அருமை இரட்சகரே 
    • பல்லவி 
    • அந்தோ கல்வாரியில் அருமை இரட்சகரே
    • சிறுமை அடைந்தே தொங்குறார் 

    • சரணங்கள்
    • 1. மகிமை மாட்சிமை மறந்திழந்தோராய்
    • கொடுமை குருசைத் தெரிந்தெடுத்தாரே
    • மாயலோகத்தோடழியாதூயான்
    • தூய கல்வாரியின் அன்பை அண்டிடவே --- அந்தோ

    • 2. அழகுமில்லை சௌந்தரியமில்லை
    • அந்தக் கேடுற்றார் எந்தனை மீட்க
    • பல நிந்தைகள் சுமந்தாலுமே
    • பதினாயிரம் பேரிலும் சிறந்தவரே --- அந்தோ

    • 3. முள்ளின் முடியும் செவ்வங்கி அணிந்தும்
    • கால் கரங்கள் ஆணிகள் பாய்ந்தும்
    • குருதி வடிந்தவர் தொங்கினார்
    • வருந்தி மடிவோரை மீட்டிடவே --- அந்தோ

    • 4. அதிசயம் இது இயேசுவின் தியாகம்
    • அதிலும் இன்பம் அன்பரின் தியாகம்
    • அதை எண்ணியே நிதம் வாழுவேன்
    • அவர் பாதையை நான் தொடர்ந்தேகிடவே --- அந்தோ

    • 5. சிலுவைக் காட்சியை கண்டு முன்னேறி
    • சேவையே புரிவேன் ஜீவனும் வைத்தே
    • என்னைச் சேர்த்திட வருவேனென்றார்
    • என்றும் உண்மையுடன் நம்பி வாழ்ந்திடுவேன் --- அந்தோ
    • rigevidon reddit rigevidon headache rigevidon quantity
  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 5196 times