Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

அழைக்கிறார் அழைக்கிறார் இதோ


    • அழைக்கிறார் அழைக்கிறார் இதோ
    • பல்லவி 
    • அழைக்கிறார் அழைக்கிறார் இதோ
    • நீயும் வா உந்தன் நேசர்
    • ஆவலாய் அழைக்கிறார் - இதோ 

    • சரணங்கள்
    • 1. பாவத்தை ஏற்றவர் பலியாய் மாண்டவர் 
    • கல்வாரியின் மேட்டினில் கண்கொள்ளாத காட்சியே
    • கண்டிடும் , வேண்டிடும் பாவப்பாரம் நீங்கிடும் --- அழைக்கிறார்

    • 2. நோயையும் ஏற்றவர் பேயையும் வென்றவர் 
    • நேசர் உந்தன் நோய்களை நிச்சயமாய் தீர்த்தாரே
    • நோயுற்ற உன்னையே நேயமாய் அழைக்கிறார் --- அழைக்கிறார்

    • 3. துன்பம் சகித்தவர் , துயரடைந்தவர்
    • இன்னலுற்ற உன்னையே அண்ணல் யேசழைக்கிறார்
    • துன்புறும் நெஞ்சமே துரிதமாக வாராயோ --- அழைக்கிறார் 

    • 4. அந்தக் கேடடைந்தார் அழகற்றுத் தோன்றினார்
    • சொந்தமாகச் சேர்ந்திட இந்தப் பாடடைந்தாரே
    • நிந்திக்கும் உன்னையும் சந்திப்பார் நீ வாராயோ --- அழைக்கிறார்

    • 5. கல்லறைத் திறக்கக் காவலர் நடுங்கக்
    • கஸ்திகளடைந்தாரே கட்டுகளறுத்தாரே
    • உயிர்த்தார் , ஜெயித்தார் உண்டு மீட்புனக்குமே --- அழைக்கிறார்

    • 6. சாந்த சொரூபனே ! சத்திய வாசனே !
    • வஞ்சமற்ற வாயனே வந்தணைக்கும் நேயனே
    • தஞ்சமே தன்னையே தந்துனை அழைக்கிறார் --- அழைக்கிறார்
  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 1593 times