Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

ஆனந்த கீதங்கள்


    • ஆனந்த கீதங்கள்
    • பல்லவி 
    • ஆனந்த கீதங்கள் எந்நாளும் பாடி
    • ஆண்டவர் இயேசுவை வாழ்த்திடுவோம்
    • அல்லேலூயா ஜெயம் அல்லேலூயா
    • அல்லேலூயா ஜெயம் அல்லேலூயா 

    • சரணங்கள்
    • 1. புதுமை பாலன் திரு மனுவேலன் 
    • வறுமை கோலம் எடுத்தவதரித்தார் 
    • முன்னுரைப்படியே முன்னணை மீதே
    • மன்னுயிர் மீட்கவே பிறந்தாரே --- ஆனந்த

    • 2. மகிமை தேவன் மகத்துவராஜன் 
    • அடிமை ரூபம் தரித்திகலோகம்
    • தூதரும் பாட மேய்ப்பரும் போற்ற
    • துதிக்குப் பாத்திரன் பிறந்தாரே --- ஆனந்த

    • 3. மனதின் பாரம் யாவையும் நீக்கி
    • மரண பயமும் புறம்பே தள்ளி
    • மா சமாதானம் மா தேவ அன்பும்
    • மாறா விஸ்வாசமும் அளித்தாரே --- ஆனந்த 

    • 4. அருமை இயேசுவின் திருநாமம்
    • இனிமை தங்கும் இன்னல்கள் நீக்கும்
    • கொடுமை பேயின் பெலன் ஒடுக்கும்
    • வலிமை வாய்ந்திடும் நாமமிதே --- ஆனந்த

    • 5. கருணை பொங்க திருவருள் தங்க
    • கிருபை பொழிய ஆர்ப்பரிப்போமே
    • எம்முள்ளம் இயேசு பிறந்த பாக்கியம்
    • எண்ணியே பாடிக் கொண்டாடுவோம் --- ஆனந்த

    • methotrexat grapefruit methotrexat folsyre methotrexat 7 5
  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 930 times