Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

இயேசுவை நம்பினோர் மாண்டதில்லை


    • இயேசுவை நம்பினோர் மாண்டதில்லை
    • 1. இயேசுவை நம்பினோர் மாண்டதில்லை
    • என்னென்ன துன்பங்கள் நேரிட்டாலும்
    • சிங்கத்தின் வாயின்றும் இரட்சிப்பார் 
    • பங்கம் வராதுன்னை ஆசீர்வதிப்பார் 

    • பல்லவி
    • நெஞ்சமே நீ அஞ்சிடாதே 
    • நம்பினோரைக் கிருபை சூழ்ந்திட 
    • இம்மட்டும் காத்தவர் இம்மானுவேல்
    • இன்னமும் காத்துன்னை நடத்துவார் 

    • 2. நாசியில் சுவாசமுள்ள மாந்தரை 
    • நம்புவதில்லை தம் ஆலோசனை
    • கோர பயங்கர காற்றடித்தும்
    • கன்மலைமேல் கட்டும் வீடு நிற்கும் --- நெஞ்சமே

    • 3. இயேசுவின் நாமத்தில் ஜெயம் பெற்றே
    • ஏகிப் பறந்திடும் பக்தரோடே
    • சேர்ந்தென்றும் வாழ்த்திடும் ஐக்கியத்திலே 
    • ஜெய கம்பீரமே உனக்குண்டே --- நெஞ்சமே

    • 4. விஸ்வாசத்தால் நீதிமான் பிழைப்பான் 
    • வறட்சி மிகுந்த காலத்திலும்
    • பக்தன் வலது பாரிசத்திலே
    • கர்த்தன் தாம் நிற்பதால் அசைந்திடான் --- நெஞ்சமே

    • 5. ஏழை உன் ஆத்துமா பாதாளத்தில் 
    • என்றும் அழிந்திட விட்டு விடார்
    • தம் சமூகம் நித்திய பேரின்பமே
    • சம்பூரண ஆனந்தம் பொங்கிடுமே --- நெஞ்சமே

    • 6. அங்கே அநேக வாசஸ்தலங்கள் 
    • அன்பின் பிதா வீட்டில் ஜொலிக்குதே
    • நேர்த்தியான இடங்களில் உந்தன் 
    • நித்திய பங்கு கிடைத்திடுமே --- நெஞ்சமே
    • toilax 5mg toilax online toilax spc
  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 378 times