Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

உம் பாதம் பணிந்தேன்


    • உம் பாதம் பணிந்தேன்
    • பல்லவி 
    • உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே
    • உம்மையன்றி யாரைப்பாடுவேன் - ஏசையா
    • உந்தன் அன்பு உள்ளம் பொங்குதே 

    • சரணங்கள்
    • 1. பரிசுத்தமே பரவசமே
    • பரனேசருளே வரம் பொருளே
    • தேடினதால் கண்டடைந்தேன்
    • பாடிட பாடல்கள் ஈந்தளித்தீர் --- உம்பாதம்

    • 2. புது எண்ணெய்யால் புது பெலத்தால்
    • புதிய கிருபை புது கவியால் 
    • நிரப்பி நிதம் நடத்துகின்றீர்
    • நூதன சாலேமில் சேர்த்திடுவீர் --- உம்பாதம்

    • 3. நெருக்கத்திலே உம்மை அழைத்தேன்
    • நெருங்கி உதவி எனக்களித்தீர்
    • திசைக் கெட்டெங்கும் அலைந்திடாமல்
    • தீவிரம் வந்தென்னைத் தாங்குகின்றீர் --- உம்பாதம்

    • 4. என் முன் செல்லும் உம் சமூகம்
    • எனக்கு அளிக்கும் இளைப்பாறுதல்
    • உமது கோலும் உம் தடியும்
    • உண்மையாய் என்னையும் தேற்றிடுதே --- உம்பாதம்

    • 5. கனிசெடி நீர் நிலைத்திருக்கும்
    • கொடியாய் அடியேன் படர்ந்திலங்க
    • கினை நறுக்கிக் கிளை பிடுங்கி
    • கர்த்தரே காத்தென்னை சுத்தம் செய்தீர் --- உம்பாதம்

    • 6. என் இதய தெய்வமே நீர்
    • எனது இறைவா ஆருயிரே
    • நேசிக்கிறேன் இயேசுவே உம்
    • நேசமுகம் என்று கண்டிடுவேன் --- உம்பாதம்

    • 7. சீருடனே பேருடனே
    • சிறந்து ஜொலிக்கும் கொடுமுடியில்
    • சீக்கிரமாய் சேர்த்திடுவீர்
    • சீயோனை வாஞ்சித்து நாடிடுவேன் --- உம்பாதம்
  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 4685 times