Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

உள்ளத்தில் அவர்பால்


    • உள்ளத்தில் அவர்பால்
    • உள்ளத்தில் அவர்பால் பேரன்புள்ளோரெல்லாம்
    • எண்ணத்தில் தெளிவை பெறுவீர்
    • சொல்லதில் கூறுவீர் வாழ்வதில் சாதிப்பீர்
    • இயேசு தேடும் நபர் இவரே

    • 1. பரமன் பேரிலே பற்றுக் கொண்டோரெல்லாம் 
    • எளிதில் புரிவார் அவரின் பாரத்தை 
    • உலகின் பேரிலே இயேசுவின் அக்கரை
    • தமதாக்கியவர் வாழுவார் , மாளுவார்
    • உண்மை அடியவர் இயேசுவை அறிவார்
    • தம்மையே அவர்க்காய் அளிப்பார்

    • 2. தேசங்கள் தீவுகள் பல பிராந்தியங்கள் 
    • பாவத்தால் நிறைந்து சாபமாகிறது
    • திறப்பின் வாயிலே நிற்கத்தக்கதாக
    • தேவன் தேடும் நபர் நம்மிலே யார் யாரோ?
    • உண்மை அடியவர் இயேசுவை அறிவார்
    • தம்மையே அவர்க்காய் அளிப்பார்

    • 3. செல்வம் சீர் சிறப்பு நற்குடிப் பிறப்பு
    • செல்வாக்கு அந்தஸ்து படாடோபவஸ்து
    • யாவையும் பெரினும் சாகையில் என் செய்வீர்?
    • உலகின் சம்பத்து குப்பை என்றே சொல்வீர்
    • உண்மை அடியவர் இயேசுவை அறிவார்
    • தம்மை அவர்க்காய் அளிப்பார்
  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 427 times