Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

உம்மைப் போல் யாருண்டு


    • உம்மைப் போல் யாருண்டு
    • உம்மைப் போல் யாருண்டு
    • எந்தன் இயேசு நாதா 
    • இந்தப் பார்தலத்தில்
    • உம்மைப் போல் யாருண்டு
    • பாவப்பிடியினில் சிக்கி நான் உழன்றேன்
    • தேவா தம் அன்பினால் மன்னித்தீர் --- உம்மைப் 

    • 1. உலகம் மாமிசம் பிசாசுக் கடியில் 
    • அடிமை யாகவே பாவி நான் ஜீவித்தேன் 
    • நிம்மதி இழந்தேன் தூய்மையை மறந்தேன்
    • மனம் போல் நடந்தேன் ஏமாற்றம் அடைந்தேன்
    • என்னையா தேடினீர் ஐயா இயேசு நாதா
    • உம்மை மறந்த ஓர் துரோகி நான்
    • என்னையா தேடினீர் ஐயா இயேசு நாதா
    • அடிமை உமக்கே இனி நான் --- உம்மைப்

    • 2. இன்றைக்கு நான் செய்யும் இந்தத் தீர்மானத்தை
    • என்றைக்கும் காத்திட ஆவியால் நிரப்பும்
    • நொறுக்கும் , உறுக்கும் , உடையும் வனையும்
    • உமக்கே உகந்த தூய சரீரமாய்
    • ஐம் பொறிகளையும் உமக்குள் அடக்கும்
    • இயேசுவே ஆவியால் நிரப்பும்
    • வெற்றி வாழ்க்கையுள்ள மகனாய் திகழ
    • அக்கினி என் உள்ளம் இறக்கும் --- உம்மைப்

    • 3. வீட்டிலும் ஊரிலும் செல்லுமிடமெங்கும்
    • சோதனை வந்திடில் கர்த்தா நீர் காத்திடும்
    • மேசியா வருகை வரையில் பலரை
    • சிலுவைக் கருகில் அழைக்க ஏவிடும்
    • முழங்காலில் நிற்க வேதத்தை அறிய
    • தினந்தோறும் தேவா உணர்த்தும்
    • உமக்கும் எனக்கும் இடையில் எதுவும் 
    • என்றுமே வராமல் காத்திடும் --- உம்மைப்
  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 785 times