Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

உலகோர் உன்னைப் பகைத்தாலும்


    • உலகோர் உன்னைப் பகைத்தாலும்
    • 1. உலகோர் உன்னைப் பகைத்தாலும்
    • உண்மையாய் அன்பு கூருவாயோ? (2)
    • உற்றார் உன்னை வெறுத்தாலும்
    • உந்தன் சிலுவை சுமப்பாயோ? (2) 

    • பல்லவி
    • உனக்காக நான் மரித்தேனே
    • எனக்காக நீ என்ன செய்தாய் (2) 

    • 2. உலக மேன்மை அற்பம் என்றும்
    • உலக ஆஸ்தி குப்பை என்றும் (2)
    • உள்ளத்தினின்று கூருவாயோ?
    • ஊழியம் செய்ய வருவாயா (2)

    • 3. மேய்ப்பன் இல்லாத ஆடுகள் போல்
    • மேய்கிறார் பாவப்புல் வெளியில் (2)
    • மேய்ப்பன் இயேசுவை அறிந்த நீயும்
    • மேன்மையை நாடி ஒடுகின்றாயோ? (2)

    • 4. இயேசு என்றால் என்ன விலை 
    • என்றே கேட்டிடும் எத்தனை பேர் (2)
    • பிள்ளைகள் அப்பம் கேட்கின்றனர்
    • ஜீவ அப்பம் கொடுப்பாயா? (2)

    • 5. ஐந்து சகோதரர் அழிகின்றாரே 
    • யாரையாவது அனுப்பிடுமே (2)
    • யாரை நான் அனுப்பிடுவேன்
    • யார்தான் போவார் எனக்காக (2)
  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 959 times