Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

எக்காள சத்தம்


    • எக்காள சத்தம் வானில் தொனித்திடவே
    • பல்லவி 
    • எக்காள சத்தம் வானில் தொனித்திடவே
    • எம் இயேசு மாராஜனே வந்திடுவார் 

    • சரணங்கள்
    • 1. அந்த நாள் மிக சமீபமே
    • சுத்தர்கள் யாவரும் சேர்ந்திடவே
    • தேவ எக்காளம் வானில் முழங்க
    • தேவாதி தேவனை சந்திப்போமே

    • 2. கர்த்தரின் வேளையை நாம் அறியோம்
    • கர்த்தரின் சித்தமே செய்திடுவோம்
    • பலன்கள் யாவையும் அவரே அளிப்பார்
    • பரமனோடென்றும் வாழ்ந்திடுவோம்

    • 3. கண்ணிமை நேரத்தில் மாறிடுவோம்
    • விண்ணிலே யாவரும் சேர்ந்திடுவோம்
    • கண்ணீர் கவலை அங்கே இல்லை
    • கர்த்தர் தாமே வெளிச்சமாவார்
  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 349 times