Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

எந்தன் உள்ளம் புதுக்கவியாலே


    • எந்தன் உள்ளம் புதுக்கவியாலே
    • 1. எந்தன் உள்ளம் புதுக்கவியாலே பொங்க
    • இயேசுவைப் பாடிடுவேன்
    • அவர் நாமம் ஊற்றுண்ட பரிமளதைலம்
    • அவரையே நேசிக்கிறேன் 

    • பல்லவி
    • அல்லேலுயா துதி அல்லேலூயா -- எந்தன்
    • அண்ணலாம் இயேசுவைப் பாடிடுவேன்
    • இத்தனை கிருபைகள் நித்தமும் அருளிய
    • கர்த்தனைக் கொண்டாடுவேன் 

    • 2. சென்ற காலம் முழுவதும் காத்தாரே ஓர்
    • சேதமும் அணுகாமல் 
    • சொந்தமாக ஆசீர் பொழிந்தெனக்கென்றும்
    • சுகபெலன் அளித்தாரே --- அல்லேலூயா

    • 3. சிலவேளை இமைப்பொழுதே தம் முகத்தை
    • சிருஷ்டிகர் மறைத்தாரே
    • கடும்கோபம் நீங்கி திரும்பவும் என்மேல்
    • கிருபையும் பொழிந்தாரே --- அல்லேலூயா

    • 4. பஞ்சகாலம் பெருகிட நேர்ந்தாலும் தாம்
    • தஞ்சமே யானாரே
    • அங்கும் இங்கும் நோய்கள் பரவி வந்தாலும்
    • அடைக்கலம் அளித்தாரே --- அல்லேலூயா

    • 5. களிப்போடு விரைந்தெம்மைச் சேர்த்திட என்
    • கர்த்தரே வருவாரே
    • ஆவலோடு நாளும் வானத்தை நோக்கி
    • அனுதினம் காத்திருப்போம் --- அல்லேலூயா 
  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 313 times