Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

எந்தன் ஜெபவேளை


    • எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன்
    • எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன்
    • தேவா பதில் தாருமே
    • எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் நீரே
    • உம்மை நான் நாடி வந்தேன்

    • 1. சோராது ஜெபித்திட ஜெப ஆவி வரம் தாருமே
    • தடை யாவும் அகற்றிடுமே தயை கேட்டு உம்பாதம் வந்தேன்

    • 2. உம்மோடு எந்நாளும் உறவாட அருள் செய்யுமே
    • கர்த்தாவே உம் வார்த்தையை கேட்டிட காத்திருப்பேனே

    • 3. நம்பிக்கை இல்லாமல் அழிகின்ற மாந்தர்களை
    • மீட்டிடும் என் இயேசுவே போராடி ஜெபிக்கின்றேன் நாதா

    • 4. நாளெல்லாம் பாதத்தில் கர்த்தாவே காத்திருப்பேன்
    • கண்ணீர் ஜெபம் கேளுமே கருணையின் பிரவாகம் நீரே 
  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 1835 times