Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

எந்தன் நாவில் புதுப்பாட்டு


    • எந்தன் நாவில் புதுப்பாட்டு
    • பல்லவி
    • எந்தன் நாவில் புதுப்பாட்டு
    • எந்தன் இயேசு தருகிறார் (2) 

    • அனுபல்லவி
    • ஆனந்தம் கொள்ளுவேன் அவரை நான் பாடுவேன்
    • உயிருள்ள நாள் வரையில் (2) --- எந்தன் 

    • சரணங்கள்
    • 1. பாவ இருள் என்னை வந்து சூழ்ந்து கொள்கையில்
    • தேவனவர் தீபமாம் என்னைத் தேற்றினார் --- ஆனந்தம்

    • 2. வாதை நோயும் வந்தபோது வேண்டல் கேட்டிட்டார்
    • பாதை காட்டி துன்பமெல்லாம் நீக்கி மீட்டிட்டார் --- ஆனந்தம்

    • 3. சேற்றில் வீழ்ந்த என்னையவர் தூக்கியெடுத்தார்
    • நாற்றமெல்லாம் ஜீவரத்தம் கொண்டு மாற்றினார் --- ஆனந்தம்

    • 4. தந்தை தாயும் நண்பருற்றார் யாவுமாகினார்
    • நிந்தை தாங்கி எங்குமவர் மேன்மை சொல்லுவேன் --- ஆனந்தம்

    • 5. இவ்வுலக பாடு என்னை என்ன செய்திடும்
    • அவ்வுலக வாழ்வைக் காண காத்திருக்கிறேன் --- ஆனந்தம்

  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 1112 times