Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

என் ஜெபவேளை


    • என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்!
    • 1. என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்!
    • அப்போதென் துக்கம் மறப்பேன்!
    • பிதாவின் பாதம் பணிவேன்
    • என் ஆசையாவும் சொல்லுவேன்!
    • என் நோவுவேளை தேற்றினார்
    • என் ஆத்ம பாரம் நீக்கினார்
    • ஒத்தாசை பெற்றுத் தேறினேன்
    • பிசாசை வென்று ஜெயித்தேன்

    • 2. என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்!
    • மா தாழ்மையோடு பிரார்த்திப்பேன்
    • மன்றாட்டைக் கேட்போர் வருவார்
    • பேர் ஆசீர்வாதம் தருவார்
    • என் வாக்கின் மேல் விஸ்வாசமாய்
    • என் பாதம் தேடு ஊக்கமாய்
    • என்றோர்க்கென் நோவைச் சொல்லுவேன்
    • இவ்வேளையை நான் வாஞ்சிப்பேன்

    • 3. என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்!
    • ஆனந்த களிப்படைவேன்
    • பிஸ்காவின் மேலே ஏறுவேன்
    • என் மோட்ச வீட்டை நோக்குவேன்
    • இத்தேகத்தை விட்டேகுவேன்
    • விண் நித்திய வாழ்வைப் பெறுவேன்
    • பேரின்ப வீட்டில் வசிப்பேன்
    • வாடாத க்ரீடம் சூடுவேன்!
  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 255 times